Temporary teacher work for tribal people: Perambalur Collector

மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியாற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளதார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மலையாளப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் மாதாந்திர தொகுப்பூதியத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.9,000- மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.8,000-வீதம் ஒரு கல்வி ஆண்டில் கோடைவிடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டத்தின்படி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளது.

மேற்படி, பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது முழு கல்வித் தகுதி விவரங்களுடன் தட்டச்சு செய்து 28.08.2017 மாலை 05.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அளித்தவர்களிடம் 02.09.2017 அன்று பழங்குடியினர் நல இயக்குநரால் நேர்காணல் நடத்தி பணியமர்த்தப்பட உள்ளது.

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும், விண்ணப்பதாரர் ஆசிரியர் பணிக்கான முழுக்கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்,

தேர;ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தினைத் தவிர எந்த விதமான படிகளும் வழங்கப்பட மாட்டாது, பணிநியமனம் செய்யப்படும் ஒப்பந்த ஆசிரியர்கள் அனைவரும் தற்காலிக பணியாளர்கள் ஆவர்.

பிற்காலத்தில் இவர்கள் நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் கோருதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர்களுக்கான சலுகைகளை பெற முற்றிலும் தகுதியற்றவர்கள் ஆவர்.

பணிநியமனம் செய்யப்படும் ஒப்பந்த ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை (கோடைவிடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் பணியில் தொடர அனுமதிக்கப்படுவார்கள், மேலும் விண்ணப்பத்துடன் அனைத்து கல்வித் தகுதிச் சான்றுகளையும் இணைக்க வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!