Tenzing Norgay Award-athletes, coaches apply

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராமசுப்ரமணிய ராஜா விடுத்துள்ள தகவல் :

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2017ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in -லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 04.03.2017 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்திடவேண்டும்.

மேலும், விண்ணப்பங்களை அனுப்பும் உறையின் மீது 2017ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச (Tenzing Norgy National Adventure Award for the year 2017) விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28364322 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!