The 3rd anniversary of the CITU Agaramsegoor branch Auto Association near Perambalur
பெரம்பலூர் அருகே சிஐடியு அகரம்சிகூர் கிளை ஆட்டோ சங்க 3 வது ஆண்டு விழா : அன்னதானம் வழங்கி நோட்டு புத்தகம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சிகூர் சிஐடியு ஆட்டோ சங்க கிளையின் 3 வது ஆண்டு துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக சங்க தலைவர் சந்திரகாசன் கொடி ஏற்றி விழவை துவக்கி வைத்தார்.
பின்னர் மதியம் பெரம்பலூர் அருகே செஞ்சேரியில் செயல்பட்டு வரும் வித்யாஸ்ரமத்தில் தங்கி உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அகரம்சிகூர் கிளை நிர்வாகிகள் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் இளம்பரிதி, துணைத் தலைவர் கருப்பையா பெரம்பலூர் கிளை ஆட்டோ சங்க நிர்வாகிகள் சி.சண்முகம், பி.ரெங்கநாதன் மல்லீஸ்குமார் மற்றும் பூமாலை, அழகேசன், சின்னசாமி, தென்னரசு பெரியசாமி, மகேந்திரன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்பு காரம் வழங்கினர். முடிவில் சிம்புஜோதி நன்றி கூறினார்.