The 4th District Conference of the Abolition of Untouchability was held in Perambalur!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனி பெரம்பலூர் மாவட்ட 4வது மாநாடு, லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் தீஒமு மாவட்ட தலைவர் என்.செல்லதுரை தலைமையில் நடந்தது. வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம்.சக்திவேல் அஞ்சலி தீர்மானம் வாசித்தார், வழக்கறிஞர் ஸ்டாலின் வரவேற்றார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தொடக்க உரை ஆற்றினார். தீஒமு மாவட்ட செயலாளர் எம்.கருணாநிதி மாநாட்டு அறிக்கை வாசித்தார். தி.க அக்ரி. ஆறுமுகம், லட்சுமி மருத்துவமணை டாக்டர் சி.கருணாகரன் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், மாவட்ட தலைவர் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளர் அ.கலையரசி, விசிக விவசாய பிரிவு வீரசெங்கோலன், வழக்கறிஞர் ப.காமராசு, மாணவர் சங்க மாவட்ட தலைவர் கருணைகடல், வாலிபர் சங்கம் எஸ்.கே.சரவணன் சிபிஎம் நகர செயலாளர் சிவானந்தம், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீஒமு மாநில தலைவர் பி.செல்லகண்ணு நிறைவுரை ஆற்றினார். பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக எஸ்.பாஸ்கரன் மாவட்ட செயலாளராக ஆர்.கோகுலகிருஷ்ணன் பொருளாளராக எம்.கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பி.கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.