The 71st Independence Day celebration at Perambalur today is celebrated as a celebration: the Collector hosting the National flag.

பெரம்பலூரில் 71வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆட்சியர் வே.சாந்தா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று 71வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆட்சியர் வே.சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை, தீயணைப்பு துறை, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளை கவுரவித்தார். பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய 203 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்

தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 30 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 125 பேருக்கு ரூ.77 லட்சத்து 36ஆயிரத்து 421 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திசாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மற்றும் காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.

இதனையொட்டி கிராம சபைக் கூட்டம் மாவட்டம் முழுவதும் நடக்க உள்ளது. அதில் சிறுவாச்சூர் கிராமத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பெரம்பலூர் மதனகோபாலத சுவாமி கோயிலில் நடக்கும் சமபந்தி போஜனம் நிகழச்சியிலும் கலந்து கொள்கிறார்.

இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!