The AMMA two-wheeler vehicle Scheme: the 2251 Women’s get new LLR license in perambalur


பெரம்பலூர் : அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் எல்.எல்.ஆர்., எடுப்பதற்காக பெரம்பலூர் வட்டார போக்குவத்து அலுவலகத்தில் பெண்கள் இன்று குவிந்தனர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பணிக்கு செல்லும் பெண்கள் பயனடையும் வகையில் இரு சக்கர வாகன திட்டம் அறிவித்து இருந்தார்.

பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியமும், வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கவும், பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும் அறிவித்து இருந்தார். முதற்கட்டமாக, பெண்கள் ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால், போதும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதிகளவு பெண்கள் ஆர்வம் காட்டாததால், வாகன பழகுனர் உரிமம் கொடுத்து விண்ணப்பித்து விட்டு, பின்னர், உரிமம் பெற்ற பின்னர் மானியம் வழங்குவதாக தளர்த்தியதற்கு பின்னர் கடந்த ஜன.22ம் தேதி முதல் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் இன்று கடைசி நாள் என்பதால், மட்டும் ஒரே நாளில், 370 பேர் வாகன ஓட்டுனர் பழகுனர் உரிமத்திற்காக விண்ணப்பித்தனர். அவர்களில், 370 பேருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மனுக்களை பரீசீலித்து பழகுநர் உரிமம் வழங்கினர். 50 சதவீத மானியம் கிடைப்பதால் இத்திட்டம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஜன.22ம் தேதி முதல் இன்று பிப் 5ம் தேதி வரை 2251 பேர் எல்.எல்.ஆருக்காக விண்ணபித்து பழகுநர் உரிமத்தை பெற்று சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!