The amount of crops affected by drought had arranged to obtain information Perambalur District Superintendent Panintira Reddy

panidira-reddy-inspection-perabalur வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் பயிர்களுக்கு உண்டான நிவாரணத் தொகை பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு போதிய மழை பொழியாததால் விவசாயிகள் பயிரிட்ட மானவாரி சாகுபடி பயிர்கள் பெருமளவு விளைச்சல் கொடுக்காமலேயே சேதம் அடைந்துள்ளது.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாவட்ட கண்காணிப்பளாரான பணீந்திர ரெட்டி ஆலோசித்து விவசாயிகளின் வயல்களை பார்வையிட்டு, பின்னர், நேரிடையாக அங்கிருந்த விவசாயிகளிடம் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அதற்கு விவசாயிகள் சேதம் குறித்து பயிர்களின் மகசூல் குறித்தும் தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் பணீந்திர ரெட்டி ,
இது வரை எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யததால், பயிர் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இன்று ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம், அதே நேரத்தில், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு திட்ட பயன்கள் முழுமையாக கிடைக்க பெறுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!