The annual festival of Namakkal municipality high school

நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் கோட்டையில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆண்டுபு விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முன்னாள் மாணவர்கள் ஸ்ரீதர், கவிதாகுமாரி, தாரணி, கீர்த்தனா, காயத்ரி, சுவேதா ஆகியோருக்கு பரிசு வழங்கினார்.

மேலும், மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். விழாவில் பள்ளி தலைமையாசிரியர் மரகதம், நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரவி, கட்டிடக்குழு தலைவர் பெரியசாமி, முன்னாள் கவுன்சிலர் சம்பத், ஜவகர் பால் பவன் ஒருங்கிணைப்பாளர் தில்லைசிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் ரைசாபேகம் நன்றி கூறினார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!