The authorities had tender scam: in Perambalur Panchayat Union office contractors blockade stopping vehicles

perambalur-union-office

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் விட்டதில் அதிகாரிகள் முறைகேடாக நடத்தியதை கண்டித்து இன்று ஒப்பந்தரரர்கள் அலுவலக நுழைவு வாயிலில் வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பழைய இரும்பு சாமான்கள் எடுத்து கொள்வதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 9 பேர் மட்டுமே டெண்டருக்கு விண்ணபித்துள்ளனர். ஆனால் விடுமுறை தினத்தை பயன்படுத்தி 10 வது ஒரு நபரை அதிகாரிகள் சேர்த்து அவருக்கே டெண்டர் விட்டது தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு மோட்டார் சைக்கிள் வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நடத்திய டெண்டர் ரத்து செய்யப்பட்டு முறையாக நடத்தப்படும் உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!