The baby was born in 108 ambulance traveling to Perambalur
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
சேலம் மாவட்டம் லத்துவாடி அருகே உள்ள திட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கீர்த்தனா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கீர்த்தனா மீண்டும் கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இன்று கீர்தணாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே கீர்த்தணாவுக்கு பிரசவவலி அளவுக்கு அதிகமாகி துடித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா உடும்பியம் வி.வி சர்க்கரை ஆலை அருகே நிறுத்தினார்.
பின்னர், ஆம்புலஸ்சில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் சவுமியா, ஆம்புலன்ஸ்குள்ளேயே கீர்த்தனாவுக்கு சிகிச்சையளித்தார். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாயும், சேயும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர்.