The Bhoomi pooja for road work near Perambalur: MLA R.Tamilselvan started.
பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் எம்.ஜி.ஆர் நகர், இந்திராநகர் பகுதியில் மாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.82.81 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பேவர் பிளாக் சாலைகளுக்கான பூமி பூஜையை தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர் நகரில் 11 சாலைகள் 52.74 லட்சம் மதிப்பிட்டிலும் , எளம்பலூல் வடக்கு தெரு 4சாலைகள் 11.69 லட்சம் மதிப்பிட்டிலும், மற்றும் இந்திரா நகரில் 3சாலைகள் 18.38 லட்சம் மதிப்பிட்டிலும்; மொத்த 18 சாலைகள் பணிகள் தொடங்கப்பட்டது.
இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இச்சாலைப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்புடைய அலுவலர்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் எளம்பலூர் பொதுமக்கள் மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.