The BJP was cleaning the school premiere on the birthday of Prime Minister Modi.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் கூடத்தை பாஜகவினர் தூய்மை செய்தனர்.
பெரம்பலூர் ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் ஏற்பாட்டில் சிறுவாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி தூய்மை (சுத்தம்) செய்யும் பணி நடந்தது. இதில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், தடா.பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன், சிவராமன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.