The Brahma Kumaris procession took place in Perambalur
பெரம்பலூரில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் 80-வது ஆண்டு விழாவை ஒட்டி அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறைஞானம் பெறுதல் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்திசிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
2-வது நாளான இன்று காலை 10மணிக்கு ஆண்டு விழாவும், பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நடத்தப்பட்டபேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது.
விழாவில் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கேரளா, திருச்சி, சென்னை பகுதிகளை சேர்ந்த முதுநிலை ராஜயோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டர்.