The bureaucracy obtained a bribe near Perambalur and demanding the closure of the official liquor shop

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரிகள் திறந்து வைத்த மதுக்கடையை அகற்ற கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் பண்பகம் பொதுமக்கள் சேவை மன்றம் நிறுவனர் கொடுத்துள்ள மனு :

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணாரம்பூண்டி கிராமத்தில் மூடப்பட்ட மதுக்கடையை அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கடையை மீண்டும் திறந்துள்ளனர். மதுக்கடையை சுற்றிலும், தொடக்கப்பள்ளி, பெண்கள் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி, பள்ளிவாசல், நூலகம், பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதரா நிலையம் ஆகியவை உள்ளன.

மாவட்ட ஆட்சியரிடம், மனு கொடுத்தன் பேரில், கடை அகற்றப்பட்டது. ஆனால், கடந்த குடியரசு தினத்திற்கு பிறகு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு, கடையை திறக்க ஏற்பாடு செய்ததுடன், மீண்டும் மூடப்பட்ட கடைகளை திறக்க முயற்சித்து வருகிறார்கள், ஆனால், ஊராட்சி சார்பிலும் மதுக்கடை திறக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், குடிகாரர்களின் அட்டசாம் அதிகரிப்பால் பொதுமக்கள் மாணவிகள், கடும் அவதிபட்டு வருகின்றனர். எனவே மதுக்கடையை மூடக்கோரி அந்த மனுவில் கோரியுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!