the buses truck collision: 50 injured near Perambalur


பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று அரசுப் பேருந்துகள் மற்றும் இரண்டு ஆம்னி பேருந்து, இரண்டு கார்கள் மோதி விபத்து 50க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஆம்னி (ஆப்பிள் டிராவல்ஸ்) பேருந்தும் அரியலூரிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரியும் பெரம்பலூர் அருகேதிருச்சி சாலையில் சிறுவாச்சூருக்கும், மலைப்ப நகர் பிரிவு சாலைக்கும் இடையே ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி சலையோரத்தில் உள்ள 20 அடி ஆழ பள்ளத்தில் பக்க வாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்ப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் மொதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே அதிவேகமாக தூத்துக்குடி நோக்கி சென்ற அரசுப்பேருந்து, கம்பம் நோக்கி முன்னே சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் (நேஷனல் டிராவல்ஸ்) பின்னால் மோதியது.

இதில் நிலை தடுமாறிய ஆம்னி பஸ் அதற்கு முன்னே திண்டுக்கல் மற்றும் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு அரசுப்பேருந்துகளில் மோதி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் தடுப்பில் இறங்கி விபத்துக்குள்ளானது.

ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் முன்னே சென்ற அரசுப்பேருந்து கரூர் நோக்கி ஒரு கார் மீது மோதியது. இதேபோல் சிறுவாச்சூர் என்ற இடத்தில் முன்னே சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின்(எஸ்ஆர்எம் டிராவல்ஸ்) பின்னால் தூத்துக்குடி நோக்கி சென்ற ஒரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த அடுத்தடுத்த விபத்துகளில் 50க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கம்பம் நோக்கி சென்ற ஆம்னி பஸ்சின் பின்னால் தூத்துக்குடி நோக்கி சென்ற அரசுப்பேருந்து மோதிய விபத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர் பட்டுராஜாவை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பயணிகள், வாகன ஓட்டிகள்,போலீசார்உ தவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நான்கு விபத்துகள் குறித்தும் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துகளினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது இதனால் வாகன ஓட்டிகள் பிரேக்கை இயக்கியும் நிற்காமல் சென்று அனைத்து வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!