The Chief Minister has opened the classroom built at Rs.3.20 crore at Kadoor and sengunam
தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி, அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.60 கோடி வீதம் ரூ.3.20கோடி மதிப்பீட்டில் காடூர் மற்றும் செங்குணம் கிராமங்களில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி மாண மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை (லட்டு) வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி தெரிவித்ததாவது:
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால், தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிட விலையில்லா லேப்டாப், விலையில்லா மிதிவண்டி உள்ளிட்ட 14 வகையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
மாணவ, மாணவிகள் அனைவரும் தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டங்களை நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
காடூர் பள்ளியில் பயின்ற மாணவ-மாணவிகள் கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் வகையில் மதிப்பெண்கள் பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்து நல்ல மனிதர்களாக வாழ்ந்துகாட்டுவதே மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மா (ஜெயலலிதா) அவர்களுக்கு செய்யும் நன்றியாகும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும், ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணசாமி, காடூர் ஸ்டாலின் மற்றும் கல்வித் துறையை சேர்ந்த அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.