The Complainant of the Kamal narpani mandram, to give rotten eggs to school students : collector refused

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளில் அழுகிய நிலையில் இருப்பதாக கமல் நற்பணி மன்றத்தினர் தெரிவித்த புகாருக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்று கமல் தனது டிவிட்டர் பதிவில், இன்று பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு ஊடகங்களில் வெளியானது, இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென இன்று பெரம்பலூர் நகரில் முத்து நகர் தொடக்கப்பள்ளி உட்பட சில பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 376 பள்ளிகளில் நாள் ஒன்றுக்கு 38 ஆயிரத்து 283 மாணவர்களுக்கு தேவையான முட்டைகள் வாரம் இருமுறை (திங்கள், வியாழன்), தினங்களில் நாமக்கல் பண்ணைகளில் இருந்து நேரடியாக வினியோகம் செய்யப்படுகிறது. அவை தரமானதாகவும், எடை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே வினியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீரில் முட்டைகளை மூழ்க செய்து பரிசோதித்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும், அப்படி தரமற்ற முட்டைகள் கண்டுபிடிக்கும் போது அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. மாற்றாக அதற்கு பதில் முட்டைகள் உரிய சத்துணவு கூடத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அழுகிய தரமற்ற முட்டைகள் எந்த ஒரு மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என கமல் நற்பணி மன்றத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!