The complaint was lodged at Perambalur demanding legal action against the Bharatiya Janata Party chief
பெரம்பலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளராக உள்ள பேரா.முருகையன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அக்கட்சியினர் புகார் மனு ஒன்றை மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்தனர்.
அம்மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நற்பெயருக்கும் சமூக பணிக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆதாரமற்ற செய்தியை பரப்பி வருகிறார். தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது இந்திய தண்டணைச் சட்டத்தில் தண்டணைக்குரிய குற்றமாகும். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். வழக்கறிஞர்கள் அழகேசன், அருண் மணிமாறன் மற்றும் ஜெயக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.