The court issued an arrest warrant for the owner of a cell phone store to the customer not has compensation

பெரம்பலூரில் வாடிக்கையாளருக்கு இழப்பீடு தொகை வழங்காத செல்போன் கடை உரிமையாளரை பிடிக்க பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் அய்யம்பெருமாள், இவர் கடந்த 2012ல் ஆகஸ்டு மாதம் 13 தேதியன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல செல்போன் விற்பனை நிலையத்தில் பிரபல கம்பனியின் செல்போனை வரிகள், இன்சூரன்ஸ் உள்பட ரூ. 4 ஆயிரததிற்கு வாங்கி உள்ளார். வாங்கிய பின்பு செல்போனின் டிஸ்பிளே உள்ளிட்ட சில செயலிகள் வேலை செய்யாததால் அந்த கடையில் தகவலை தெரிவித்துள்ளார். அதற்கு அங்கு செல்போன் கடை தரப்பில் சொந்த பணத்தில் சரி செய்து விட்டு அதற்குரிய ரசீது கொடுத்து பணத்தை பெற்று செல்ல தெரிவித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளரான வழக்கறிஞர் அய்யம்பெருமாள், செல்போனை பழுது நீக்கம் செய்து அதற்கான கட்டணம் ரூ.1162 செலுத்தி விட்டு ரசீது கொண்டு வந்து செல்போன் கடையினரிடம் கொடுத்து ரசீதுக்குரிய வழங்க கோரி உள்ளார். இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தராமல் பிரபல செல்போன் கடை அலைகழித்து வந்ததை தொடர்ந்து பெரம்பலூர் நுகர்வோர் நீதிமனற்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இன்சூரன்ஸ் பெற்றுத் தவறியதற்கும், சேவை குறைப்பாட்டிற்கும், அலைக்கழித்து மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்கும் ரூ. 13162-யை இழப்பீடு வழங்க உத்திரவிட்டார். ஆனால், செல்போன் கடை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்காமல் அலைக்கழிப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட அய்யம்பெருமாள் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு, செல்போன் கடை உரிமையாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!