The dead bodies of the husband and wife who rescued abroad, petition to collector
வெளிநாட்டில் இறந்து போன கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி பெரம்மபலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு கொடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் மருதமுத்து வயது (35). கட்டிட வேலைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றுள்ளார். கடந்த ஆக.16-ந் தேதி மாரடைப்பால் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. கடந்த 15 நாட்கள் ஆகியும், கணரவது உடல் சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படாததால் இன்று மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரிடம் தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மருதமுத்துவின் மனைவி லெட்சுமி மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஒரு வார கால அவகாசத்திற்குள் உடலை பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.
இறந்து போன மருதமுத்துவிற்கு சுதர்னன் (3), தர்சிகா என்ற 10 மாத பெண் குழந்தையும் உள்ளது.