The deadline to apply for the extension of the program providing AMMA Two wheeler Scheme

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் மகளிருக்கு இருசக்கர மோட்டார்ர் வாகனம் வழங்க வாகன விலையில் 50 விழுக்காடு அல்லது ரூ.25000- மானியம் (இதில் எது குறைவோ அது) தொகையில் இருசக்கர வாகனம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 810 மகளிருக்கு 2017-18 ஆம் ஆண்டில் அம்மா இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படவுள்ளதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளைச் சார்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கு 05.02.2018 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 5,302 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கிராமப்புற பகுதிகளில் 3,752 பேரும், நகர்ப்புற பகுதிகளில் 1,280 பேரும் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.

இதில் 5.2.2018 வரை கிராமப்புற பகுதிகளில் இருந்து 1,697 நபர்களிடமிருந்தும், நகர்ப்புற பகுதிகளிலிருந்து 777 நபர்களிடமிருந்தும் என ஆகமொத்தம் 2,474 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. அனைவரின் விண்ணப்பங்களும் முழுமையாக ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று அம்மா மானிய விலையிலான இருசக்கர மோட்டார் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை 10.02.2018 மாலை 5.00 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தாங்கள் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ தங்களின் விண்ணப்பங்களை சேர்க்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!