The decision to permit Share Auto operating in night at Perambalur

பெரம்பலூர் நகரில் இரவு நேரத்திலும் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரி ஆட்டோ சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்


பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1ஆட்டோ சிஐடியு மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் சங்க பேரவை கூட்டம் துரைமங்கலம் மாவட்டக் குழு அலுவலகத்தில் 16.7.2017 அன்று நடைபெற்றது.

மாவட்ட தலைவர் பி.பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னதாக மாநிலக்குழு சி.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எ.ரெங்கநாதன் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் சி.கனகராஜ் வரவு – செலவு குறித்து அறிக்கை வாசித்தார்.

சிஐடியு பொருப்பாளர்கள் ஆர்.சிற்றம்பலம் ஆர்.அழகர்சாமி, பி.துரைசாமி, ஆர்.ராஜகுமாரன், எ.கணேசன், பி.ரெங்கராஜ், எஸ்.அகஸ்டின், பி.முத்துசாமி, கே.மணிமேகலை, எம்.செல்லதுரை, மற்றும் கல்யாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

வீடுகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளிகளுக்கு மத்திய மாநில அரசு அறிவித்த நிதி உதவியில் இருந்து இடம் வழங்கி, வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும்,

சாலை வசதி கழிப்பிட வசதி

எளம்பலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில், சாலை வசதி கழிப்பிட வசதி செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ரேசன் கடை

எம்.ஜி.ஆர் நகரில் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வரும் பகுதியில் ரேசன் கடை இல்லை, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்வதுடன், தேசிய நெடுஞ்சாலை கடந்து சென்று பொதுமக்கள் பொருட்களை வாங்கி வர பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே எம்.ஜி.ஆர் நகரிலே ரேசன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் அவதி

எம்.ஜி.ஆர். நகர் அரசு பள்ளியில் நல்ல தண்ணீர் வசதி கழிப்பிட வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் அவதிப்படுகின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் சில சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்டோ நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருநகர் பகுதியில் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஆட்டோ நிறுத்திக்கொள்ள முன்னாள் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது அனுமதி அளித்துள்ளார். தற்போது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகட்டி வாடகைக்கு விட ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே ஆட்சியர் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி ஆட்டோ நிறுத்த வழிசெய்ய வேண்டும்.

இரவு நேரங்களில், பெரம்பலூர் புதிய, பழைய பேருந்து நிலைங்கள், காமராஜர் வளைவு, 4 ரோடு, 3 ரோடு பகுதிகளுக்கு இரவில் வரும் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக சென்று சேர இரவு நேரத்திலும் ஷேர் ஆட்டோக்களை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்,

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!