the district level cultural competition in perambalur

பெரம்பலூரில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் நடந்தப்பட்ட மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் 270 பேர் பங்கேற்று தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தினா;.

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வெங்கடேசபுரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று நடந்தது.

இதில் 5-8 வயது, 9-12 வயது 13-16 வயது ஆகிய 3 பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு வாய்ப்பாட்டு (குரலிசை), நடனம், ஓவியம் ஆகிய 3 கலைப்போட்டிகள் நடைபெற்றது.

குரலிசை போட்டியில் ஓவியப்போட்டியில் ஏறத்தாழ170 பேரும், நடனப்போட்டியில் 36 பேரும், குரலிசை போட்டியில் 64 பேரும் ஆக மொத்தம் 270 பேர் கலந்துகொண்டு தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

9-12, 13-16 வயதுப்பிரிவில் மாவட்ட அளவில் முதல்பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று போட்டிகள் ஒருங்கிணைப்பாளரும், தேவார ஆசிரியருமான அரணாரை நடராஜன் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!