The district may apply to study stays in the sports hotels

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மாணவர்களுக்காக மதுரை, திருச்சி,திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களிலும், மாணவியருக்காக ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைகான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 02.05.2017 முதல் 04.05.2017 வரை நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு தடகளம், இறகுப் பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ் ஜுடோ, ஸ்குவாஸ் மற்றும் வில்வித்தை உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ் மற்றும் ஜுடோ உள்ளிட்ட விளையாட்டுப்பிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ – மாணவியர்கள் அதற்கான உரிய படிவங்களை மார்ச் 22.03.2017-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இவ்விடுதிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2017-2018-ம் வருட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://www.sdat.tn.gov.in, என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்வதுடன், விளையாட்டு விடுதி சார்பான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர்களிடம் 20.04.2017 க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!