The Electricity Supply Board, contract workers demanding wage offer of Rs 380, the picket Preambalur
பெரம்பலூரில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியூ) சார்பில், வட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக ரூ.380-யை வழங்கக் கோரி புதிய பேருந்து நிலையம் முன்பு, மறியல் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில், பல ஆண்டு காலமாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யவதுடன், போனஸ், கருணைத் தொகை வழங்கவும்,
கே2, சிட் அக்ரிமெண்ட், முறையில் வாரியமே நேரடி ஒப்பந்த பணிகளை செய்யவும், ஒப்பந்த பணிளார்களே இல்லை என்று அறிக்கை அனுப்பும் போக்கை கைவிட வேண்டியும்,
வருகைப் பதிவேடு பராமரிப்பதுடன் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டியும், விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், அத் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதில், மாநில எஸ்.அகஸ்டின், மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி உள்பட ஏராளமான பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.