The flowering ceremony at the Madura kaliyamman temple near Perambalur is celebrated tomorrow
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் அமைந்துள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நாளை (செவ்வாய்கிழமை) இரவு தொடங்கி நாளை மறுதினம் அதிகாலை வரை நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நாளை காலை 11மணிக்கு மூலவர் அபிஷேகமும், மதியம் 1 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 10 மணிக்கு கோவில் நடையில் இருந்து ஊர் பொதுமக்களுடன் பூகொண்டுவருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி தொடங்கி 18-ந்தேதி (புதன்கிழமை) காலை 10மணிவரை பூச்சொhpதல் நிகழ்ச்சி தொடா;ந்து நடக்கிறது.
விழாவில் 60-க்கும் மேற்பட்ட மலா;ரதங்களில் வண்ணமலா;கள் அம்மனுக்கு மலா; அh;ச்சனைக்காக கோவிலுக்கு வந்தடையும் என்று எதிh;பாh;க்கப்படுகிறது.
பூச்சொரிதல் விழா ஏற்பாடுகளை சிறுவாச்சூர் சேஷாத்திரி அய்யங்கார் குடும்பத்தினரும், இந்துசமயஅறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையா; ராணி, கோவில் செயல்அலுவலர் பாரதிராஜா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கோவில் பூசாரிகள் மற்றும் மதுரகாளி பக்தர்கள் செய்துவருகின்றனர்.
பூச்சொரிதல் விழாவை அடுத்து சித்திரை திருவிழா இம்மாதம் 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கு காப்புகட்டுதலும் மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடக்கிறது. தேரோட்டம் மே.3-ந்தேதி விமரிசையாக நடக்கிறது.