The four men fled to the police after attempting to rob the house near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், பேரளி கிராமத்தினுள் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்று தப்பி ஓடிய நான்கு இளைஞர்கள் போலீசில் சிக்கினர்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி கிராமத்தை சேர்ந்த முகமது பாரூக் (வயது 22) சென்னையை சேர்ந்த கிரண்குமார் (22) நாகப்பட்டினம் வெள்ளிபாளையத்தை சேர்ந்த அருண்ராஜ் (22) பூம்புகாரை சேர்ந்த கபிலன் ( 22) இவர்கள் நான்கு பேரும் கோவை மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 10-ம் வகுப்பு முடித்த டன் ஐடிஐ படித்து விட்டு வேலை கிடைக்காமல் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் வேலை கிடைக்காததால் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க முடிவு செய்து, பேரளி கிராமத்தில் நேற்று மாலை நோட்டம் விட்டனர். நல்லம்மாள் (55) என்பவரது வீடு பூட்டி இருப்பதை அறிந்த நான்கு பேரும் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள் கூச்சலிட்டு நான்கு பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த 4 பேரும் அவர்களது இரு சக்கர வாகனங்களில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் பாடாலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேரின் இரு சக்கர வாகனங்களையும் சந்தேகமடைந்து மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பேரளி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதை அந்த நான்கு பேரும் ஒப்பு கொண்டனர். மேலும் அந்த நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!