The fraudulent fraud of the youth at Perambalur bus stand: gold jewelery, Rs 10 thousand robbery

பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சரவணன்(32). தனியார் கேட்டரிங் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வரும் இவர் நேற்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று பஸ்சுக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அவர் அருகில் வந்த இரண்டு வாலிபர்கள் பஸ்சுக்கு காசு இல்லை என்றும், உதவி செய்யும் படியும் கோரியுள்ளனர். இதனால் அவர்களுக்கு உதவி செய்ய சரவணன் முற்பட்டுள்ளார், அப்போது சரவணனை மிஸ்மெரிஷம் செய்த வாலிபர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் அழைத்து சென்று, அவர் அனிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம், 10 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்து கொண்டு தப்யோடி தலைமறைவாகினர்.

சிறிது நேரத்திற்கு சுயநினைவு திரும்பிய சரவணன் தனது கழுத்து மற்றும் கை விரலில் அனிந்திருந்த தங்க நகைகள் மற்றும் ஃபர்சில் வைத்திருந்த ரொக்க பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தை தொடர்பு கொண்டு, நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்ட சரவணனிடம் பெரம்பலூர் போலீசார் புகார் பெற்று வழக்கு பதிந்து, நகரில் உள்ள சி.சி.டி.வி கேம ராக்களின் வீடியோ பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தில் வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் போகன் சினிமா பாணியில் கண்களால் மிஸ்மெரிஷம் செய்து தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை நூதன முறையில் திருடிச்சென்ற சம்பவம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் உள்ளிட்ட பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!