The girl child sexual harresment case petty shop owner remand in jail near Perambalur
பெரம்பலூர் அருகே மிட்டாய் வாங்க வந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த பெட்டிக் கடைக்காரர் சிறையில் அடைப்பு
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமம் இந்திரா நகரில் பெட்டி கடை நடத்தி வருபவர் தர்மலிங்கம் (வயது 65). நேற்று மாலை அப்பகுதியை 6 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்க பெட்டிக் கடைக்கு வந்துள்ளார். அந்த சிறுமியை தர்மலிங்கம் கடைக்குள் அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். அதன் அச்சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் தர்மலிங்கத்தை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், மகிளா நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, நீதிபதி விஜயகாந்த் உத்திரவின் பேரில் தர்மலிங்கத்தை திருச்சியில் மத்திய சிறையில் அடைத்தனர்.