The government bus attached in court does not pay compensation for the victim’s family
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து நீதிமன்ற உத்திரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.
பெரம்பலூர்: கடலூர் மாவட்டம், ஆவினங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (65) விவசாயி, கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி, வீட்டின் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் துரைப்பாண்டியன் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து உயிரிழந்த துரைப்பாண்டி மனைவி ராஜம் (எ) ராஜம்மாள், இவர்கள் வாரிசுகள் இளமதி, அழகுராணி, கனிமொழி, புகழேந்தி, இளமயில் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2014 ம் ஆண்டு ஜுலை 30ம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்து 500 வழங்க உத்திரவிட்டிருந்தது. ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வந்தது. இது நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருச்சி அரசு போக்குவரத்து கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.7லட்சத்து 21 ஆயிரத்து 505 வழங்க உத்தரவிட்டதுடன் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தையும் ஜப்தி செய்ய நீதிபதி பாலராஜமாணிக்கம் உத்திரவிட்டிருந்தார்.
அதன் பேரில், நீதி மன்ற அமீனாக்கள் திருச்சியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து போது ஜப்தி செய்து நீதிமன்றத்தில் எடுத்து நேர்நிறுத்தினர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் உரிய ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.