The Government High schools through online for teachers and school head masters general transfer ; CEO in the work of the conference gave orders to change.
அரசுமேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல்; கலந்தாய்வு இணைய தளம் வாயிலாக பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இக்கலந்தாய்வில் கலந்து கொண்ட மேலப்புலியூர் அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பாலு எசனை பள்ளிக்கும், வெங்கலம் அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சுந்தரராஜீ பெரம்பலூர் பள்ளிக்கும்,
வி.களத்தூர் அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் ஜெ.சங்கர் மேலப்புலியூர் பள்ளிக்கும், கீழப்புலியூர் அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் .பி.நாகமணி செட்டிகுளம் பள்ளிக்கும், நக்கசேலம் அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் சி.மலர்கொடி வெங்கலம் பள்ளிக்கும் என 5 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள்ளான பணிமாறுதல் ஆணைகளையும்,
கூத்தூர் அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் ஜெ.லூரியிமேரி ஸ்டெல்லா திருச்சி மாவட்டம் கல்லகம் பள்ளிக்கும், பேரளி அ.மே.நி.பள்ளி தலைமையாசிரியர் எம்.ராஐன் திருச்சி மாவட்டம் தும்பலம் பள்ளிக்கும், என 2 பேர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதலுக்கான ஆணைகளையும் பெற்றனர்.
இவ்வாறு பணிமாறுதல் பெற்ற தலைமைஆசிரியர்களுக்கான பணிமாறுதல் ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி வழங்கினார்ஃ
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.