The Government offered compensation to the victim of a bus accident on the order of a court confiscation

court-perambalur

விபத்தால் பாதிக்கப்படடவர்களுக்கு, இழப்பீட்டு வழங்காத அரசு பேருந்து, நீதிபதி உத்திரவின் பேரில் பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர் புறநர்பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் சுசின்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் கருவாட்டு ஓடை என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

இது, தொடர்பாக சுசின்குமார், மனவைி புவனேஸ்வரி, அவரது தந்தை கதிர்காமவேலு, சகோதரர் பிரவீன்குமார், ஆகியோர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 23 தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் பாதிக்கப்ட்ட குடும்பத்தினருக்கு விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து நிர்வாகம் ரூ. 8லட்சத்து 63 ஆயிரம் வழங்க உத்திரவிட்டு இருந்தது ஆனால், இழப்பீட்டு தொகை குறிப்பிட்ட காலத்தில் அரசு பேருந்து நிர்வாகம வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வட்டியுடன் சேர்த்து ரூ. 9லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்திரவிட்டார். உத்திரவின் பேரில், கோர்ட் அமீனாக்கள் இன்று ஆற்காட்டில் இருந்து திருச்சி நோக்கி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை பெரம்பலூர் புதிய பேருந்து நிலைத்தில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதின் பேரில் 15 நாள் அவகாசத்தில் பேருந்து இன்று விடுவிக்கபட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!