The government rural health nurses decided to hold a 10th demonstration!

பெரம்பலூர்: அரசு கிராம சுகாதார செவிலியர்களை கொத்தடிமை போல் நடத்துவதை கண்டித்து பெரம்பலூரில் வரும் 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கிராம சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தின் கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள அம்மன் நகரில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். செயலாளர் லதா, பொருளாளர் செல்வமணி, துணைத் தலைவர் அ.மீனாட்சி, அமைப்பு செயலாளர் சரோஜா, துணைச் செயலாளர்கள் அன்னலட்சுமி, ஜோதி, தணிக்கையாளர் அறிவுக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

பிறநிலை அலுவலர்களின் பணிகளை கிராம சுகாதார செவிலியர்கள் மீது சுமத்தியும், துணை செவிலியரை வட்டாரம் மாற்றி மாற்றுப்பணிக்கு அனுப்பும் மாவட்ட சுகாதார துணை துணை இயக்குனரை கண்டிக்கிறது.

கிராம சுகாதார செவிலியா;களை ஒருமையில் பேசுவதுடன், அவர்களது கருத்துக்களை கேட்க மறுப்பதையும், திட்ட பணிகளுக்கு வரும் நிதிநிலை குறித்து வெளிப்படை தன்மை இல்லாமை மற்றும் செவிலியர்களின் பணப்பயன்களை விரைந்து அனுமதிக்க கையூட்டு கேட்பதை இக்கூட்டம் கண்டிக்கிறது.

லெப்பைக்குடிகாட்டில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். 2014-15 ஆண்டுவரை 240 பயனாளிகளுக்கு டாக்டா; முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதிஉதவியை வழங்காமல் காலம் கடத்தாமல் உடனே வழங்கவேண்டும். செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்காமல் தடுப்பு ஊசி போடும் பணியில் ஈடுபடுத்துவதை ஆகியவற்றை இக்கூட்டம் கண்டிக்கிறது.

சுகாதாரப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர், லெப்பைக்குடிகாடு குடிமை மருத்துவஅலுவலர் ஆகியோர் கிராம சுகாதார செவிலியர்களை கொத்தடிமையாக நடத்தும் போக்கை கண்டித்தும் இம்மாதம் 10-ந்தேதி சிறுவிடுப்பு எடுத்துக்கொண்டு காலை 10மணிஅளவில் புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!