The karai villagers of the protested against the change of the hospital

பெரம்பலூர் அருகே மருத்துவமனையை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் வட்டார தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது அந்த மருத்துவமனையை தற்போது பாடாலூருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரை, புதுக்குறிச்சி, மலையப்ப நகர் உள்ளிட்ட சில கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர், ஒன்றுதிரண்டு அவ்வழியாக வந்த பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மற்றும் மருத்துவத் துறை, வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியிலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர், நடந்த சமாதான பேச்சு வார்த்தையில், இடமாற்றம் செய்யப்படுவது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!