The minister said the authorities to abuse the name: Cooperative Association workers demonstration
20170123_110947
அமைச்சர் பெயரை கூறி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இன்று காலை கூடிய தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் அமைச்சர் பெயரை கூறி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடத்தப்படும் பொது சேவை மையத்திற்கு வாங்கப்படும் பிங்கர் பிரிண்ட் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் சந்தை விலையை விட இரு மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப் பேரவை விதியின் கீழ் கட்டப்படும் கட்டங்களுக்கு 10 லட்சம் வரை செலவாகும் தொகையை அதிகப்படுத்தி 15 லட்சம் என அதிகப்படுத்தி உள்ளதாகவும்,

பல்வேறு பணிகளில் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டாய கமிசன் வசூல் செய்யப்படுவதாகவும், ரூ.18 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சாக்குகள் சிண்டிகேட் முறையில ரூ.8க்கு விற்கப்படுவதாகவும், உத்தரவு பிறக்கப்படாமல் வாய்மொழியாக மாதந்தோறும் பல்வேறு நிறுவனங்கள் முறைகேடு சேவை அளித்தாக ஆயிரக்கணக்கில் பணம் பெற்று செல்வதாகவும்,

நியாய விலைக்கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்கள் தேங்காய் எண்ணெய், டீத்தூள், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய அங்காடிகளுக்கு தள்ளப்படுவதாகவும், பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கரும்பிற்கு ஒவ்வொரு சங்கத்திடம் இருந்தும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளதாகவும் இது போன்ற முறைகேடுகளால் கூட்டுறவு சங்கங்கள் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு நட்டத்தில் தள்ளப்படும் என்பதால உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வலியுறுத்தி இன்று கூட்டுறப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!