The MLAs that call for the removal of the State of Edappadi are all fighters: TTV dinakaran

பெரம்பலூர் நகர அதிமுக பேரவை செயலாளர் மோகன் இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்த அதிமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினரகன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நீட் தேர்வு தொடர்பாக திமுக சார்பில் அறிவாலயத்தில் நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். எங்களது ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என திவாகரன் அவரது சொந்த கருத்தை ஒரு ஆர்வத்தில் சொல்லி இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட கருத்து.

எடப்பாடி அன்கோவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தால் மத்திய அரசிற்கு இருக்கும் நல்ல பெயர் கூட கெட்டு போய் விடும்.

எடப்பாடி அரசை அகற்ற வேண்டும் என குரல் கொடுத்து வரும் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் போராளிகள். அவர்களுக்கு ஆதரவாக தான் நான் இருக்கிறேன். எனக்கு ஆதரவாக அவர்கள் இல்லை. அவர்களுக்கு என் மீது எந்த விதமான அதிருப்தியும் இல்லை.

கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்து வரும் முதல்வர் எடப்பாடியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்கும் வரை அவர்கள் ஓய மாட்டர்கள்.

தமிழக மக்களின் கவனத்தை, குறிப்பாக கவர்னரின் கவனத்தை ஈக்க வேண்டும் என்று தான் அவர்கள் ஒரு இடத்தில் கூடி இருக்கிறார்கள்.

சொந்த வேலை காரணமாக ஊருக்கு அவர்கள் சென்று வருவார்கள் நேற்று கூட நான் அன்பு சகோதரி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த போது என்னுடன் நான்கு, ஐந்து எம்.எல்.ஏக்கள் வந்திருந்தனர்.

அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சொன்னால், யார் உங்களிடம் சொன்னது. என்று கேள்வி எழுப்பிய தினகரன் பத்திரிக்கைகளில் வரும் செய்தி எல்லாம் உண்மையா? என்று கேட்டார்.

உங்களுக்கு பரபரப்பு தேவை என்றால் எதை வேண்டுமென்றாலும் போடுவீர்கள். நேற்று கூட நான் குழுமூருக்கு வந்த போது என்னை எதிர்த்து கோஷம் என்று செய்தி போடப்பட்டுள்ளது. பழனிச்சாமி அரசாங்கத்திற்கு எதிராக போடப்பட்ட சத்தத்தை எனக்கு எதிராக போட்டார்கள் என போடுகிறீர்கள்.

நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். இன்றைக்கு நடைபெறுகிற அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கினோம். நாங்கள் யாரை முதல்வராக ஆக்கினோமோ அந்த முதல்வர் கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்கிறார். அதனால் அவரை நீக்க வேண்டும் என்று தான், கடந்த 12 நாட்களாக எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகிறார்கள்.

எங்களை பொறுத்த வரை இன்றைக்கு பெரம்பலூரிலும் சொல்கிறேன். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை காப்பாற்ற வேண்டும். தமிழக மக்களின் நலனை காப்பாற்றிட நாங்கள் எந்த ஒரு முடிவையும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனின் நலன் கருத்தி நாங்கள் எடுப்போம். என்றார்.

பேட்டியின் போது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கவுள்பாளையம் செல்வக்குமார், அண்ணா தொழிற்சங்க வீரபாண்டியன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!