The Namakkal Collector requested the public to cooperate with the mosquito eviction workers

நாமக்கல் : வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினம் அனுசரித்து, விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள், குடங்கள் பாத்திரங்கள் ஆகியவற்றில் புகுந்து முட்டையிடா வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும். மேலும் வீடுகளின் உள்ளே ரெப்ரிஜிரேட்டர்கள் மற்றும் பூங்தொட்டிகளில், கொசுப்புழு உற்பத்தி ஆவதை தடுக்கும் பொருட்டு, தினசரி அவற்றை சுத்தம் செய்திட வேண்டும்.

வீட்டிற்கு வெளியே உள்ள பயன்படுத்தப்படாத ஆட்டு உரல், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் டம்ளர்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுவதுடன் மூலம் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுப்புழு ஆவதை தடுத்திட முடியும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனைகள், பயன்பாட்டில் இல்லாத வீடுகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பஸ் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதன் பொறுப்பாளர்கள் உரிய கால அளவுகளில் தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்புபணி மேற்கொள்ள வீடு தேடி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், காய்ச்சல் கண்டவர்களின் பட்டியலை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பொது மக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடிச்சென்று உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை பெறுவதையும், போலி டாக்டரிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!