The NREGA project is implemented by AP DRDA Team learn the scheme

பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆந்திர பிரதேசம் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை துணை ஆணையர் சுனீதா தலைமையில் 6 பேர் கொண்ட குழு 12.06.2017 முதல் 15.06.2017 வரை பார்வையிடுகின்றனர்.

இன்று (14.06.17) பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ப்பட்ட எசனைப் பகுதியில் ரூ.87,500- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காளான் உற்பத்தி மையம், ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனிநபர் வெங்காயக் கொட்டகை,

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அன்னமங்கலம் பகுதியில் ரூ.99,900ஃ- மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டை, ரூ.4.95 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகள், ரூ. 21.80 இலட்சம் அமைக்கப்பட்ட மதிப்பீட்டில் நாற்றங்கால், ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கிணறு ரூ.1.98 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பரன் மேல் ஆடுகள் கொட்டகை, ரூ.1.98 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மாட்டுக்கொட்டகை, ரூ.90,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மண்புழு உரம் தயாரித்தல்,

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தனூர; மற்றும் மேலமாத்தூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட ரூ.15.55 மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் வரகூர் பகுதியில் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம் என ரூ.61.03இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை தொடர்பான கலந்துரையாடல், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இணையதளப் பதிவேற்றம், நிதி பரிவர்த்தனை தொடர்பாக அறிந்து கொண்டனர்.

மேற்கண்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!