The Perambalur district police dept was joined by new dog Ninja for the dog squad team
பெரம்பலூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய்படை பிரிவில் புதியதாக துப்பறியும் மொப்பநாய் நின்ஜா (Ninja) (ஆண்) ஒரு வயது உடைய நாய் பணிக்கு சேர்ந்துள்ளது.
இது கடந்த 6 மாதமாக கொயமுத்தூர் மாநகரத்தில் உள்ள துப்பறியும் மோப்பநாய்படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து இன்று 10.06.2017 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், முன்னிலையில் மாவட்ட காவல் துறையில் இணைக்கப்பட்டது. மோப்பநாய் நின்ஜா குற்ற செயல்கள் (திருட்டு) மற்றும் கொலை வழக்குகளில் காவல் துறைக்கு குற்றவாளிளை கண்டுபிடிக்க துப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும், இதற்கு முன்னதாக பணியாற்றி ராபின் என்கிற 13 வயதுடைய நாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து நின்ஜா பணியில் இணைந்தது. இதனை கவனிக்க ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் இரு காவலர்கள் உள்ளனர். ஏற்கனவே ஜுட்டா என்கிற நாய் மோப்பநாய் படைப் பிரிவில் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.