the perambalur surrounding areas, rain fell yesterday
பெரம்பலூர் மாவட்டத்தின் பலப்பகுதிகளில் நேற்று ஆங்காங்கே மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிகளான எசனை, இரட்டை மலை சந்து, வேப்பநதட்டை, பாப்பாங்கரை, அனுக்கூர் உள்ளிட்ட பலப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்தது. நேற்று மதியம் அனல் காற்று வீசிய நிலையில் மழை பெய்தது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.