The petition gave it useless: the exams students demanding government operating buses

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்திற்கு லாடபுரம் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டு வந்தது.தனியாருக்கு சொந்தமான மூன்று மினி பஸ்களே இயங்கி வந்துள்ளது.

அந்த மினி பேருந்துகளும், திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, கிடாவெட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களும் வாடகைக்கு எடுத்து சென்றுவிடுகின்றனர்.

முகூர்த்த நாட்களில் மேலப்புலியூர் கிராம மக்கள், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சொந்த அலுவல் காரணமாக செல்ல முடிவதில்லை. நேற்று இதே போன்று மேலப்புலியூர் – பெரம்பலூருக்கு இயக்கப்பட்டு வந்த மினி பஸ்கள் வாடகைக்கு சென்று விட்டன.

இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு கூடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதனால் இன்று காலை ஒன்று திரண்ட அக்கிராமக்கள் வாடகைக்கு சென்று விட்டு திரும்பிய மினி பஸ்களை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் கோட்டாச்சியர் கதிரேசன், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தின் பேரில் முற்றுகையிட்டு மறித்து வைத்து இருந்த பேருந்துகளை விடுவித்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போரட்டத்தால் சுமார் 3 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.

அரசு பேருந்து இயக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரி மனு கொடுத்து இருந்தனர். ஆனால், ஆட்சியர் இதில் கவனம் செலுத்தவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!