பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் இன்று லாடபுரத்தை சேர்ந்த மணி என்பவர் கொடுத்துள்ள மனு விவரம்: லாடபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை கடன் பெற்றதே இல்லை என்றும், தற்போது வங்கியில் வழங்கப்பட்டு வரும் செம்மறி ஆடு வளர்ப்பு கடனில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், அதனால் தனக்கும் கடன் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.