The police acted like 13 sovereing a retired headmistress modern jewel robbery: Police serious search operation
பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை சந்திரா என்பவரிடம் போலீசார் போல் நடித்து 13 பவுன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர் எளம்பலூர் சாலை முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை சந்திரா (வயது 65). இன்று மாலை ரோவர் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அவ்வழியாக அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள், ஆசிரியை சந்திராவிடம், தாங்கள் போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்ட அவர்கள், நீங்கள் அணிந்திருக்கும் நகையை திருடர்கள் பிய்த்து கொண்டு சென்று விடுவார்கள் காலம் கெட்டு கிடக்கிறது. நகையை கழட்டி இந்த தாளில் மடித்து வைத்து எடுத்து செல்லுங்கள் என ஆலோசனை தெரிவிப்பது போன்று நைசாக பேசி வளையல், தங்க சங்கிலி போன்ற நகையை கழற்றி தாளில் வைக்க செய்து மடித்து பொடடலமாக கொடுத்தனர்.

ஆசிரியை வீட்டிற்கு வந்து பொட்டலத்தை பிரித்து பார்த்த போது தாளில் நகை இல்லாமல் சிறு சிறு கற்களை நகை போன்று மடித்து கொடுத்து இருப்பதும், நகைகளை பறி கொடுத்து ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. அதிர்ச்சியுற்ற அவர் இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!