The price of onion should be set at 30 rupees per kg: A decision in the Alathur Farmers Association Circle Conference!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்ட மாநாடு ஆலத்தூர்கேட் மாஸ்டர் மாளிகை கே.வரதராஜன் நினைவரங்கத்தில் மாவட்ட பொருளாளர் பி.சின்னசாமி தலைமையில் நடந்தது. வட்டதலைவர் தங்கராசு, வட்ட செயலாளர் கே.பச்சையா வட்ட பொருளாளர் ராமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். வேப்பந்தட்டை வட்ட தலைவர் சி.கோவிந்தன், செயலாளர் பி.ராமச்சந்திரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மகேஸ்வரி, எஸ்பிடி.ராஜாங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.

பெரம்பலூர் மாவட்டம் வெங்காய விலைச்சல் அதிகமாக உற்பத்தியாகும் மாவட்டம் சின்ன வெங்காயத்திற்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சின்ன வெங்காயத்திற்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தெரணி கிராமத்திலுள்ள பெரிய ஏரி தூர் வாரி சீரமைத்து கொடுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி கூலியை முழுமையாக வழங்க வேண்டும், பாடாலூர் அரசு மருத்துவமணையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சிறு உழவடை கருவிகளை இலவசமாகவும் விவசாய அறுவடை இயந்திரங்களை மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. திரளான விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!