The public road was stuck before the District Collector’s Office, denouncing the Perambalur Municipality

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் அபிராமபுரம் விரிவாக்கம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி, பல முறை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சபாபதி மனைவி கவிதா (வயது 40) என்பவர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஸ்டென கிராப்பராக பணிபுரிந்து வருகிறார். பணி முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் சென்றுக் கொண்டிருந்த அபிராமபுரம் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் அங்கு பதுங்கி மர்ம நபர் கவிதாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறித்து செல்ல முயன்றார். சுதாகரித்த கவிதா திருடனுடன் போராடி தாலிக் கொடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இந்த போராட்டத்தில், தாலிக்கொடியின் ஒரு பகுதி சுமார் ஒன்றரை பவுன் மதிப்புள்ள தாலிக்கொடி திருடன் கையில் சிக்கியதும் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிந்தவர்கள் திருடனை விரட்டி பிடிக்க முயற்சித்தனர். ஆனால், திருடன் தப்பி சென்று விட்டான்.

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காரணமாக மின்விளக்கு அமைக்கப்டாததால் இருட்டாக இருந்ததால்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக குற்றம் சாட்டிய மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நகராட்சியை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் வருவாய் துறையினர், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சு வார்த்தையில் மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக அறிவித்தன் பேரில் சாலைமறியலை கைவிட்டு பின்னர், அதிகாரிகளை அப்பகுதியில் நேற்று பெய்த மழையால் சாலை சேறாக மாறி இருப்பதை அழைத்து சென்று காட்டினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால், அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!