The students requested the Perambalur authorities to speed up the road construction work
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், விளாமுத்தூரை சேர்ந்த மாணவிகள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு:
காலை, மாலை வேளைகளில் விளாமுத்தூர் கிராமத்தில் இருந்து அருகே உள்ள சிறுவாச்சூர் பள்ளிக்கு வழக்கமாக பேருந்தில் சென்று வந்தோம்.
ஆனால், கடந்த நான்கு மாதங்காளக அப்பகுதியில் சாலைப்பணி நடந்து வருகிறது. அதனால், பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
மேலும், நாங்கள் காலை, மாலை இரு வேளைகளில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு சென்று வரும் வழியல் எங்களை பலர் செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர்.
ஆகவே தினமும், பள்ளிக்கு விரைந்து சென்று வீட்டிற்கு திருமபி வர சாலைப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி உள்ளனர்.
இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கையழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர்.