The Tamil Nadu Electricity Employees Union Organization for Convention on Demand to Fuse off Call Center in Perambalur

பெரம்பலூரில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு பெரம்பலூர் கோட்ட மாநாடு துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். இணைச் செயலர் எம்.கருணாநிதி வரவேற்றார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானமும், கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் செயலாளர் அறிக்கையும் வாசித்தனர்.

வட்டசெயலாளர் எஸ்.அகஸ்டின் வட்டத் தலைவர் கே.கண்ணன் வட்ட பொருளாளர் தமிழ்செல்வன் மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சி.இராஜகுமாரி ஆகியோர் விளக்க உரைஆற்றினர். மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜ் நிறைவுரை ஆற்றினார்.

மாநாட்டில், மஸ்தூர் பணியாளர்களுக்கு, பாதுகாப்பு சாதனங்கள், வழங்குவதோடு, வாய் மொழி உத்தரவு மூலம் பணிக்கப்படுவதை நிறுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பெண் ஊழியர்களுக்கு தனி கழிவரை மற்றும் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தி தரவேண்டும்,

பெரம்பலூர் நகரில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளதால், மின் தடை நீக்க மையம் அமைத்து கொடுக்க வேண்டும், பெரம்பலூர் கோட்டத்தை நகரம் – கிராமியம் என பிரிவுகளாக பிரிக்க வேண்டும், மின் கணக்கீடு சாதனங்கள், கணினி பிரிண்டர் போன்ற உபகரணங்களை தரமானதாகவும், புதியதாகவும் வழங்க வேண்டும், வாடகை கட்டடிடங்களில் இயங்கும் அனைத்து பிரிவு அலுவலகங்களையும், வாரிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ஒரு நாள் மின் இணைப்பு என்ற அரசியல் விளம்பரத்திற்கு ஊழியர்களை சிரமப்படுத்துவதை விட்டு உடனுக்குடன் மின் கணக்கீட்டு மீட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கம்பியாளர்களையும், கள உதவியாளர்களையும், புதிய மின் பாதை நீட்டிப்பு பணிக்கு நிர்பந்திக்க கூடாது, அரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், மின் கட்டண உயர்விற்கு வழி வகுக்கும் உதய் திட்ட்தை கைவிட வேண்டும்,

கிருஷ்ணாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டுப்பாட்டு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், களப்பணியாளர்களுக்கு சீருடை தையற்கூலியாக ரூ 1500 வழங்க வேண்டும், ஒரு லட்சம் மின்இணைப்புகளுக்கு மேல் உள்ள வருவாய் பிரிவுகளுக்கு கூடுதலாக உதவி கணக்கு அலுவலரை நியமிக்க வேண்டும்,
காலியாக துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்யவும், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்திட கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்விபத்தில் இறந்த ஊழியர்களுக்கு வேலையாள் இழப்பீடு சட்டம் 1923-ன் படி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், மஸ்தூர், கணக்கீட்டாளார், களப்பணியாளர்களுக்கு ரெயின் கோட் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் விவாதம் தொகுப்புரை மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கோட்ட செயற்குழு சி.பி.வீரமுத்து நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!