the villagers blockade empty pots at veppur for demanding To make the distribution of drinking water

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் அரசமங்கலம் கிராமத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பொது மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து
நேற்று காலை வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள வடக்களுர் ஊராட்சிக்குட்பட்ட ( பழைய) அரசமங்களம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதி மக்கக்கு கடந்த ஒரு வருட காலமாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. எனவும் அப்படியே குடிநீர் விநியோகம் செய்தாலும், வாரத்திற்கு ஒரு முறை தான் செய்யப்படுவதாகவும் மேலும் இது பற்றி ஊராட்சி செயலரிடம் பலமுறை கூறி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அந்த பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு கடும் மிகவும் அவதிபடுவதாகவும் இது குறித்து பலமுறை ஊராட்சி செயலர் மற்றும் நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அரசமங்கலம் கிராமக்கள் ஒன்று திரண்டு வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் , வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர். பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். முறையாக குடிநீர் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!