The villagers of the Perambalur Collectorate’s office siege the transfer of the hospital
பெரம்பலூர் அருகே மருத்துவமனையை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் வட்டார தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது.
தற்போது அந்த மருத்துவமனையை பாடாலூருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரை, புதுக்குறிச்சி, மலையப்ப நகர் உள்ளிட்ட சில கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர், இன்று மாலை ஒன்று திரண்டு வந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது காரையில் இருந்து பாடாலூருக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலத்த கோசமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்கூட்டியே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஆட்சியர் சந்திக்க செய்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்த மக்கள் இந்த மருத்துவமனை மாற்றப்படுவதால் கிராம மக்கள் கடும் அவதிப்படுவதுடன் மருத்துவத்திற்காக அலைய நேரிடும் என்பதால் மருத்துவமனையை மாற்றாமல் இருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். அதன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அப்போது மலையப்ப நகரை சேர்ந்த காரை சுப்பிரமணியன் உள்ளிட்ட கிராம முக்கிய பிரமுகர்கள், அனைத்து கட்சியினர் வந்திருந்தினர்.