The woman soldier of Perambalur Home Guard who handed over the money purse with gold coins and money to the owner!

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா, இவர் ஊர்க்காவல் படையில், காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று, எளம்பலூர் சாலையில், சொந்த வேலைக் காரணமாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராம் தியேட்டர் அருகே கேட்பாரற்று கிடந்த மணிப்பர்சை கண்டார். அதை எடுத்துப்பார்த்த போது, அதில் 6 தங்ககாசுகள், வெள்ளி செயின், ரொக்கம் ரூ.7900 ஆகியவை இருந்து கண்டு, பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், பர்ஸ் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அனிதா(23) என்பவருடையது என்பது தெரியவந்தது. பின்னர், அவரை நேரில் வரவழைத்து, முறையாக போலீசார் ஊர்க்காவல் படை பெண் வீரர் ஷர்மிளா விடம் கொடுத்து, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்க செய்தனர்.

இதற்கு, போலீஸ் எஸ்.பி மணி, மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஷர்மிளாவை பாராட்டினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!